Theme Check

அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடி மாற்றம்!!

அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடி மாற்றம்!!

அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடி மாற்றம்!!
X

முதலமைச்சர் மு..ஸ்டாலின் பரிந்துரையின்படி தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. அதன்படி, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கர் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளனர். முதுகுளத்தூர் தொகுதி எம்.எல்.. ராஜகண்ணப்பன் தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து வந்தார்.

rajakannappan

அண்மையில் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் என்பவரை சாதி பெயரை சொல்லி ராஜகண்ணப்பன் விமர்சித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில், முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.

newstm.in

Next Story
Share it