வேலை தேடுவோரே மிஸ் பண்ணிடாதீங்க.. நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!
வேலை தேடுவோரே மிஸ் பண்ணிடாதீங்க.. நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!

நாகை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை சார்பில், நாகை இஜிஎஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் நாளை (19-ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் சென்னை, ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 70-க்கும் அதிகமான முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு சுமார் 10,000 பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இதில், 8-ம் வகுப்பு படித்தவர்கள் முதல், பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ, தையல் கலை பயிற்சி பெற்ற நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண் மற்றும் பெண்கள் கலந்துகொள்ளலாம்.
அத்துடன், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களுடைய கல்வித் தகுதி குறித்த விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
முகாமில் கலந்துகொள்ள வரும் வேலை நாடுநர்கள், தங்கள் சுய விவர குறிப்பு மற்றும் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட சான்றிதழ்களுடன் வரவேண்டும். என நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
Next Story

