எதிர்ப்பை மீறி மாடலிங்.. தங்கையை ஆணவக் கொலை செய்த அண்ணன் !!
எதிர்ப்பை மீறி மாடலிங்.. தங்கையை ஆணவக் கொலை செய்த அண்ணன் !!

21 வயது இளம்பெண் ஒருவர் நடனம் மற்றும் மாடலிங் தொழிலை செய்ததற்காக அவரது சகோதரரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் ரெனலா குர்த் ஒகாரா நகரை சேர்ந்தவர் சிட்ரா (21). இவர் உள்ளூர் ஆடை பிராண்டிற்காக ஜவுளிக்கடை விளம்பரத்தில் மாடலாக நடித்திருந்தார். மேலும் பைசலாபாத் நகரின் திரையரங்குகளில் நடனமாடும் தொழிலை செய்துவந்தார்.
சிட்ராவின் இந்த தொழில் அவரின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. எனவே அவர்கள், இந்த தொழிலை விட்டு வெளியேறவேண்டும் என்று கூறி அவரிடம் தொடர்ந்து வற்புறுத்தினார்கள். ஆனால் சிட்ரா தொடர்ந்து நடனமாடி வந்தார்.
இந்நிலையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட சிட்ரா வீட்டுக்கு வந்துஇருந்தார். அப்போது அவரது பெற்றோரும் சகோதரர் ஹம்சாவும் நடனமாடும் தொழில் குறித்து பேசியப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், பின்னர் சண்டை முற்றி சிட்ரா மீது ஹம்சா துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து கொலை வழக்கு பதிவு செய்து, ஹம்சாவை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியப்போது, சிட்ராவின் நடன நிகழ்ச்சியை உறவினர் ஒருவர் மொபைல் போனில் பதிவுசெய்து அதனை அனுப்பினார். அதனைப் பார்த்த ஆத்திரத்தில் தனது சகோதரியை சுட்டுக் கொன்றதாக ஹம்சா வாக்குமூலம் அளித்ததாகவும் தெரிவித்தார்.
newstm.in