திங்கள் கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை.. மாணவர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை..!
திங்கள் கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை.. மாணவர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை..!

தமிழகத்தில் சென்னை உட்பட மாநகராட்சிகளுக்கு, வரும் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை (18ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (19ம் தேதி), வாக்கு எண்ணிக்கை நாளான 22-ம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இடையில், பிப்ரவரி 21-ம் தேதி மட்டும் பள்ளி வேலை நாள் என்பதால் அன்றும் சேர்த்து விடுமுறை அளிக்க மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், பிப்ரவரி 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையிலான 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும்.
Next Story

