Theme Check

கார்டு இல்லாமல் ஏடிஎம்-ல் பணம்.. ஆர்பிஐ கவர்னர் விளக்கம்..!

கார்டு இல்லாமல் ஏடிஎம்-ல் பணம்.. ஆர்பிஐ கவர்னர் விளக்கம்..!

கார்டு இல்லாமல் ஏடிஎம்-ல் பணம்.. ஆர்பிஐ கவர்னர் விளக்கம்..!
X

டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம் இயந்திரத்தில் கோட் ஸ்கேன் செய்து பணம் எடுக்கும் வசதி குறித்த வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்கு ஆர்பிஐ விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், “முதற்கட்டமாக சில வங்கிகளுக்கு மட்டுமே கார்டு இல்லாமல் ஏடிஎம் மெஷின்களில் இருந்து பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
upi: How will RBI's UPI-driven cardless cash ATMs initiative benefit  India?, BFSI News, ET BFSI
இது வெற்றி பெற்றால், அடுத்தடுத்து அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் யுபிஐ மூலமாக பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

இது குறித்து வங்கி ஊழியர்கள் கூறுகையில், ‘ ஸ்மார்ட் போன்களில் இதற்காக பிரத்யேகமாக செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயலிக்குள் சென்று ஏடிஎம் மெஷினில் உள்ள கோட்-ஐ ஸ்கேன் செய்து எடுக்க வேண்டிய பணம் குறித்த தகவல்களை அளித்தால் டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம். இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அபரிமிதமான வரவேற்பு உள்ளது’ என்று தெரிவித்துள்ளனர்.

பெருநகரங்களில் மட்டுமே தற்போது இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விரைவில் இந்த முறை கிராமங்கள் வரை கொண்டு சேர்க்கப்படும் என கூறப்படுகிறது.

Next Story
Share it