மசாஜ் சென்டரில் இளம் பெண்களை மிரட்டி பணம், நகை கொள்ளை!!
மசாஜ் சென்டரில் இளம் பெண்களை மிரட்டி பணம், நகை கொள்ளை!!

மசாஜ் சென்டரில் இளம்பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள சங்கரதாஸ் வீதியில் மசாஜ் சென்டர் ஒன்று இயங்கி வருகிறது. கடந்த 6ஆம் தேதியன்று மர்ம கும்பல் ஒன்று மசாஜ் சென்டருக்குள் புகுந்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தது.
அப்போது அங்கு இருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த ரூ.81 ஆயிரம் மதிபுள்ள தங்க நகை மற்றும் பணத்தை பறித்து சென்றனர். இது குறித்து மசாஜ் சென்டரின் உரிமையாளர் விஜயலட்சுமி புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பெரியகடை போலீசார் அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது பிரபல ரவுடி சத்யா தலைமையிலான 7 பேர் கொண்ட கும்பல் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் அந்த கும்பலை தேடி வந்த நிலையில், 4 நபர்களை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான சத்யா உள்ளிட்ட 3 பேரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
newstm.in

