#BIG NEWS:- தெலுங்கானாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை.. இந்தியாவில் பாதிப்பு 5 ஆக உயர்வு..!

#BIG NEWS:- தெலுங்கானாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை.. இந்தியாவில் பாதிப்பு 5 ஆக உயர்வு..!

#BIG NEWS:- தெலுங்கானாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை.. இந்தியாவில் பாதிப்பு 5 ஆக உயர்வு..!
X

கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று, தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில், ஆப்பிரிக்காவில் புதிதாக உருவான குரங்கு அம்மை நோய் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது.

இந்தியாவில் இந்த நோய் பாதித்த முதல் நபர் கடந்த 14-ம் தேதி கேரளாவில் கண்டறியப்பட்டார். அதேபோல், வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு வந்த மேலும் 2 பேர் இந்த நோய்த் தொற்றால் பாதித்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டெல்லியிலும் ஒருவருக்கு நேற்று குரங்கு அம்மை பாதிப்பு உறுதியானது. அதனைத்தொடர்ந்து அங்கு அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், டெல்லியை தொடர்ந்து தெலுங்கானாவில் ஒருவருக்கு முதல் முறையாக குரங்கு அம்மை நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 40 வயது நபருக்கு குரங்கு அம்மை தொற்று பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இதன்மூலம், இந்தியாவில் குரங்கு அம்மையால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

Next Story
Share it