Theme Check

200 பேருக்கு குரங்கு அம்மை... மேலும் எண்ணிக்கை அதிகரிக்கும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!!

200 பேருக்கு குரங்கு அம்மை... மேலும் எண்ணிக்கை அதிகரிக்கும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!!

200 பேருக்கு குரங்கு அம்மை... மேலும் எண்ணிக்கை அதிகரிக்கும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!!
X

உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று மிரட்டி வருகிறது. இதற்கிடையே, கருப்பு பூஞ்சை மற்றும் பல்வேறு வண்ண பூஞ்சை நோய்களும் மக்களை வாட்டி விட்டன. இது தவிர ஜிகா வைரஸ், நிபா வைரஸ், எபோலா வைரஸ் என உலக நாடுகளில் பல்வேறு பாதிப்புகளும் பல பருவங்களில் தீவிரம் காட்டி வருகின்றன.

Monkey-pox

இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த தொற்று பாதிப்பு கட்டுப்படுத்தி விடக்கூடியதுதான் என்றும் தெரிவித்துள்ளது. இந்த குரங்கு காய்ச்சலால் ஓரினச்சேர்க்கையாளர்கள், இரு பாலின சேர்க்கையாளர்கள்தான் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் என இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

WHO

உலக சுகாதார அமைப்பின் பெருந்தொற்று, தொற்று நோய்கள் பிரிவின் இயக்குனர் கூறும்போது, “எதிர்காலத்தில் இந்த குரங்கு காய்ச்சல் இன்னும் அதிக எண்ணிக்கையிலானவர்களை பாதிக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Next Story
Share it