Theme Check

சிகிச்சைக்காக மருத்துவமனை சென்ற குரங்கு!! VIDEO

சிகிச்சைக்காக மருத்துவமனை சென்ற குரங்கு!! VIDEO

சிகிச்சைக்காக மருத்துவமனை சென்ற குரங்கு!! VIDEO
X

பீகாரில் காயத்திற்கு சிகிச்சை பெற குரங்கு ஒன்று கிளினிக்கை தேடி வந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சசராம் பகுதியில் ஷஜமா என்ற இடத்தில் உள்ள கிளினிக்கிற்கு பெண் குரங்கு ஒன்று சென்றது. அந்த கிளினிக்கில் அகமது என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். குரங்கு நேராக நோயாளிகளுக்கான படுக்கையில் சென்று படுத்து கொண்டது.

குரங்கை பார்த்து முதலில் பயந்த மருத்துவர் அகமது, பின்னர் நிலைமையை புரிந்து கொண்டு குரங்குக்கு சிகிச்சை அளிக்க தொடங்கினார். காயத்திற்கு மருந்து தடவி ஊசியும் போட்டுள்ளார். முகத்தில் களிம்பு பூசியும் விட்டுள்ளார்.


இது அனைத்தும் நடக்கும் வரை அந்த குரங்கு அமைதியாக படுக்கையில் இருந்தது. இந்த தகவல் பற்றி அறிந்ததும் அந்த பகுதி மக்கள் கிளினிக்கிற்கு வந்து குவிய தொடங்கினர். சிகிச்சை பெற வந்த குரங்கை பார்த்து ஆச்சர்ய மடைந்தனர்.

சிகிச்சை பெற்ற அந்த குரங்கு செல்வதற்கு வசதியாக, திரண்டிருந்த கும்பலை வழி விடும்படி மருத்துவர் கூறினார். அவர்கள் விலகி நின்றதும், குரங்கு வந்த வழியே திரும்பி சென்று விட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

newstm.in

Next Story
Share it