மிக முக்கிய அரசியல் பிரபலம் மருத்துவமனையில் அனுமதி..!!
மிக முக்கிய அரசியல் பிரபலம் மருத்துவமனையில் அனுமதி..!!

முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர், தமிழ் இலக்கியங்களில் புலமை பெற்றவர், தமிழ் இலக்கியவாதி என்று பன்முகத் திறன் கொண்டவர் குமரி அனந்தன். இவரது மகள் தமிழிசை செளந்தர்ராஜன், தெலுங்கானா மற்றும் பாண்டிசேரி மாநில ஆளுநராக உள்ளார்.

தெலுங்கானாவில் தன் மகள் தமிழிசை செளந்தரராஜனுடன் வசித்துவந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன் தனது சொந்த மாவட்டமான குமரி மாவட்டத்திற்கு வந்தார். அங்கு ரயில்நிலையம் அருகில் உள்ள கன்னியாகுமரி வரலாற்று கூடத்தில் தங்கியிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு எதிர்பாராதவிதமாக கால் இடறி கீழே விழுந்தார்.
இதில் குமரி அனந்தன் தலையில் இடது பகுதியில் லேசான காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனே அவரது உதவியாளர் அவரை மீட்டு, குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு அவருக்கு காயம் ஏற்பட்ட இடத்தில் மூன்று தையல் போடப்பட்டது.

பின்னர் நேற்று காலை வரை அவசர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு இருந்த குமரி அனந்தன் தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அவரை அந்த பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர். தகவல் அறிந்த ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜனும் மருத்துவமனை நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு தொடர்ந்து நலம் விசாரித்தார்.

