Theme Check

காணாமல் போன குழந்தை கழிவறை வாளியில் கிடந்ததால் கதறிய தாய்!!

காணாமல் போன குழந்தை கழிவறை வாளியில் கிடந்ததால் கதறிய தாய்!!

காணாமல் போன குழந்தை கழிவறை வாளியில் கிடந்ததால் கதறிய தாய்!!
X

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை அடுத்த வாதலக்கரை பகுதியைச் சேர்ந்த மாரிப்பாண்டியன். மாரித்தாய் தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்தது.

இந்நிலையில் வீட்டில் மாரித்தாய் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த போது விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமால் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த மாரித்தாய் குழந்தையை பல இடங்களில் தேடி பார்த்தார்.

ஆனால் குழந்தை கிடைக்கவில்லை. மேலும் குழந்தையை யாரும் தூக்கிச் செல்லவில்லை என பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கூறினர். இதனால் வீட்டிலேயே மாரித்தாய் மீண்டும் தேடிப் பார்த்துள்ளார்.

tut baby

அப்போது, வீட்டின் குளியல் அறையிலிருந்த வாளியில் குழந்தை தலைக்குப்புற கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவரின் சத்தம் கேட்டு வந்துபார்த்த அருகே இருந்தவர்கள் உடனே குழந்தையை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு, குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it