Theme Check

வெங்காயம் சேர்த்து சமைத்த மருமகள் மீது மாமியார் போலீஸில் புகார்!!

வெங்காயம் சேர்த்து சமைத்த மருமகள் மீது மாமியார் போலீஸில் புகார்!!

வெங்காயம் சேர்த்து சமைத்த மருமகள் மீது மாமியார் போலீஸில் புகார்!!
X

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த பனாரஸி தேவி (80) என்பவரின் மகன் கடந்த 2020ஆம் ஆண்டு மேட்ரிமோனி தளம் மூலம் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஹரிஷ்கா என்ற பெண்ணை மணந்தார்.

இந்நிலையில் பனாரஸி தேவி தனது மருமகள் ஹரிஷ்கா குறித்து போலீஸிடம் புகாரளித்துள்ளார். அதில், தனது மருமகள் தன்னை எப்போதும் துன்புறுத்துவதாகவும், சமையலில் வெங்காயத்தையும், பூண்டையும் போட்டு சமைக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமையல் அறையில் உள்ள பாத்திரங்களை அழுக்காக வைத்திருக்கிறார், வீட்டில் இருந்த 50 கிராம் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை எடுத்து ரகசியமாக வைத்திருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

complaint

மருமகள் ஹர்ஷிகா மீது கடந்த ஆண்டு புகாரளித்த போது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், தற்போது தன்னை வீட்டில் உள்ள அறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாகவும் பனாரஸி தேவி புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

புகார் பெற்றுக் கொண்ட போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் அதிகாரிகள் பனாரஸி தேவியிடம் உறுதி அளித்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it