கர்ப்பிணி மருமகளை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர மாமியார்!!
கர்ப்பிணி மருமகளை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர மாமியார்!!

தெலங்கானா மாநிலம் காமாரெட்டி பகுதியை அடுத்த அச்சம்பேட்டை கிராமத்தை சேர்ந்த கீர்த்தனா (22) என்ற பெண்ணும், பக்கத்து ஊரை சேர்ந்த பண்டாரி என்ற என்ற இளைஞரும் கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்து சில நாட்களிலே, மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கீர்த்தனாவை கணவர் பண்டாரி கண்டித்துள்ளார். சண்டை தொடர்ந்ததால் கீர்த்தனாவும், பண்டாரியும் ஐதராபாத் பகுதிக்கு குடியேறினர்.
அங்கே பண்டாரி டிரைவர் தொழில் செய்து வந்தார். அப்போது கீர்த்தனா இரட்டை குழந்தைகளை கர்ப்பம் தரித்திருந்தார். இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு, மகன் - மருமகளை தாய் வீட்டிற்கு அழைத்துள்ளார்.

அவர்களின் விவசாய நிலங்களை பார்த்துக்கொள்ள ஆள் இல்லை என்றும், உடனடியாக இருவரும் இங்கே வரவேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார். இதனால் கணவன் மனைவி மீண்டும் அச்சம்பேட்டை கிராமத்திற்கு வந்தனர்.
அப்போது மாமியார் மருமகளை விவசாயம் செய்ய சொல்லியுள்ளார். மேலும் கீர்த்தனாவை சரமாரியாக வசைபாடியுள்ளார். இதனால் கோபப்பட்ட கீர்த்தனா, எதிர்த்து பதிலுக்கு பதில் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாமியார், மருமகளை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
கர்ப்பிணி என்றும் பாராமல் அவர் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தியுள்ளார். இதனால் அலறி துடித்த கீர்த்தனாவின் குரலை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு 50 சதவீத தீக்காயத்துடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவம் குறித்து கீர்த்தனாவின் தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மாமியாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
newstm.in

