Theme Check

திரைப்பட பாணியில் கேங் வார்... இளைஞர் படுகொலை!!

திரைப்பட பாணியில் கேங் வார்... இளைஞர் படுகொலை!!

திரைப்பட பாணியில் கேங் வார்... இளைஞர் படுகொலை!!
X

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த மோக்கா () மோகன் (22) என்பவர் தனது நண்பர் ஷாம் () அருணாச்சலத்தின் மனைவிக்கு பிறந்த நாள் என்பதால் புதுப்பேட்டை லப்பை தெருவிற்கு கேக் வெட்டும் நிகழ்ச்சிக்கு தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார்.

நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வந்த போது, இரண்டு பேர் கையில் ராடு வைத்துக்கொண்டு ஷாமை விசாரித்து சென்றதாக அங்கிருந்த நபர்கள் மோகனிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து மோக்கா மோகன் அவரது நண்பர்களான சந்தோஷ், ஷாம்() அருணாச்சலம், சுனில்குமார், மனோஜ் ஆகியோரை அழைத்துக்கொண்டு, விசாரித்து சென்ற நபர்களைத் தேடி புதுப்பேட்டையில் உள்ள பம்பிங் ஸ்டேஷனிற்கு சென்றனர்.

Death

அங்கு ஷாமை தேடி வந்த 8 பேர் கொண்ட கும்பல் இருந்ததால், இரண்டு கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. எதிர் கோஷ்டி திடீரென கத்தி மற்றும் இரும்பு ராடை எடுத்ததால் மோகன் உட்பட அனைவரும் சிதறி ஓடினர்.

விரட்டிச் சென்று மோக்கா மோகனை சுற்றி வளைத்த கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. கொலை தொடர்பாக எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மோகனின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மோக்கா() மோகன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. கொலை செய்துவிட்டு தப்பிய விக்ரம், யூடியூப்() வெங்கடேசன், மோசஸ், அபு, நரேஷ், வசீகரன் ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து செய்தனர்.

Chennai-murder arrest

கைது செய்யப்பட்டவர்கள் எழும்பூர் பகுதியை சேர்ந்த புறா சசி என்பவரின் நண்பர்கள் என தெரியவந்தது. புறா சசி என்பவர் செயின் பறிப்பு மற்றும் மொபைல் பறிப்பு சம்பவத்தில் திருவல்லிக்கேணி தனிப்படை போலீசார் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

அவர் தலைமறைவாக இருந்த போது, அவரை கைது செய்ய தனிப்படை போலீசாருக்கு சாம்() அருணாச்சலம் தான் தகவல் அளித்ததாக கூறி கொலை செய்துள்ளனர்.

மேலும் புறா சசி தரப்புக்கும், சாம்() அருணாச்சலம் நண்பர்களுக்கும் செயின் பறிப்பு, மொபைல் பறிப்பு சம்பவங்களில் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்ததும் போலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

newstm.in

Next Story
Share it