Theme Check

சாலை சீரமைப்பில் பல கோடி மோசடி.. முன்னாள் முதல்வர் உட்பட 6 பேர் மீது வழக்கு..!

சாலை சீரமைப்பில் பல கோடி மோசடி.. முன்னாள் முதல்வர் உட்பட 6 பேர் மீது வழக்கு..!

சாலை சீரமைப்பில் பல கோடி மோசடி.. முன்னாள் முதல்வர் உட்பட 6 பேர் மீது வழக்கு..!
X

அமராவதி உள்வட்ட சாலை சீரமைப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் அமைச்சர் நாராயணசாமி உள்பட 6 பேர் மீது சிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்தபோது, அமராவதி உள்வட்ட சாலை சீரமைப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் மங்களகிரி தொகுதி எம்எல்ஏ ஆலராமகிருஷ்ண ரெட்டி கடந்த மாதம் புகார் அளித்தார்.
Chandrababu Naidu terms Narayana arrest 'witch hunting'
அதன் பேரில் சிஐடி போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சந்திரபாபு நாயுடு, முன்னாள் அமைச்சர் நாராயணா மற்றும் பலர் மீது சிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், நகராட்சி துறை அமைச்சராக இருந்த நாராயணா, நேரடியாக முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இதற்கு உடந்தையாக முன்னாள் அமைச்சர்கள் லிங்கமனேனி ரமேஷ், லிங்கமனேனி வெங்கடசூர்யா ராஜசேகர் மற்றும் லிபில் புராஜக்ட்ஸ் மற்றும் ராமகிருஷ்ணா ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் இயக்குநர் அஞ்சனி குமார் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், அவர்கள் மீதும் சிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அத்துடன், அமராவதியை தலைநகராக அமைக்க, விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை என்றும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it