Theme Check

ரசிகர்களுக்கு சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட இசைஞானி இளையராஜா!!

ரசிகர்களுக்கு சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட இசைஞானி இளையராஜா!!

ரசிகர்களுக்கு சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட இசைஞானி இளையராஜா!!
X

இசைஞானி இளையராஜா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பல மொழிகளில் இசையமைத்துள்ளார். அவர் 1400க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இவைதவிர தனிப்பாடல்களாகவும் நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா. அவரது தனி இசைப்பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. அந்தவகையில் 'How to Name It?' இசை ஆல்பம் இளையராஜாவால் 1986ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

ilayaraja

இளையராஜாவின் 'How to Name It?' கோடிக்கணக்கான ரசிகர்களின் விருப்பத்திற்குரியது. அதன் இரண்டாம் பாகத்தை விரைவில் வெளியிடவிருப்பதாக இளையராஜா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள இசைஞானி, “திரைபடங்களில் தொடர்ச்சியாக பல பாகங்கள் வருவதைப் போல ஏன் இசையிலும் வரக்கூடாது? How to Name It? -02 விரைவில் வரப்போகிறதுஎனத் தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it