இளைஞரின் அந்தரங்க உறுப்பில் சிக்கிய மர்ம பொருள்!!
இளைஞரின் அந்தரங்க உறுப்பில் சிக்கிய மர்ம பொருள்!!

இளைஞர் ஒருவரின் அந்தரங்க உறுப்பில் சிக்கியிருந்த ஒயரை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
பாகிஸ்தான் கராச்சி நகரில் வசித்து வரும் இளைஞர் ஒருவருக்கு நீண்ட காலமாக சிறுநீர் கழிப்பதில் பிரச்னை இருந்து வந்துள்ளது. அவர் பிரச்னை தொடர்பாக மருத்துவமனையை அணுகியபோது அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.
இதில் அவரது அந்தரங்க உறுப்பில் ஏதோ ஒரு மர்ம பொருள் இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இந்த பொருள் குறித்து மருத்துவர்கள் அவரிடம் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிறுநீர் கழிப்பதில் தனக்கு பிரச்னை இருந்ததால் அதை சரி செய்ய 18 சென்டிமீட்டர் நீளமுள்ள வயரை அந்தரங்க உறுப்பில் நுழைத்ததாக கூறியுள்ளார். மேலும் அது உள்ளேயே சிக்கிக் கொண்டதால் ஏற்பட்ட வலி காரணமாக மருத்துவமனைக்கு வந்ததாகவும் கூறினார்.
அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் அந்தரங்க உறுப்பில் சிக்கியிருந்த 18 சென்டிமீட்டர் நீளமுள்ள வயரை நீக்கினர். இந்த நிலையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மருத்துவர்கள் இந்த சம்பவத்தை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக பேசியுள்ள மருத்துவர்கள் அந்த நபர் தாமதமாக வந்திருந்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும், யாரும் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.
newstm.in

