சசிகலா புஷ்பா படுக்கையறையில் மர்மநபர்... இரண்டாவது கணவர் விவாகரத்து நோட்டீஸ்!!
சசிகலா புஷ்பா படுக்கையறையில் மர்மநபர்... இரண்டாவது கணவர் விவாகரத்து நோட்டீஸ்!!

அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சசிகலா புஷ்பா, கடந்த 2018-ம் ஆண்டு தனது முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவதாக வழக்கறிஞர் ராமசாமி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக வழக்கறிஞர் ராமசாமி சென்னை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் மதுரையிலிருந்து சென்னைக்கு திரும்பிய போது வீட்டின் படுக்கை அறையில் சசிகலா புஷ்பா இருந்தார் எனவும், மற்றொரு படுக்கையில் மர்ம நபர் ஒருவர் இருந்தார் எனக் கூறினார். மேலும் அமுதா என்ற பெண்ணும் இருந்ததாகவும் வீட்டில் மதுபானங்கள் மற்றும் உணவு பொட்டலங்கள் சிதறி கிடந்ததாக கூறினார்.
வீட்டுக்குள் மர்ம நபர்களை அனுமதித்து குறித்து சசிகலா புஷ்பாவிடம் தட்டிக் கேட்ட போது தன்னை தஞ்சாவூர் ராஜா, சசிகலா புஷ்பா, அமுதா ஆகியோர் மிரட்டியதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தார்.
புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை முடிவில் சசிகலா புஷ்பா, தஞ்சாவூர் ராஜா, அமுதா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இது குறித்து பேசிய ராமசாமி தனது வீட்டில் சசிகலா புஷ்பா பாலியல் தொழில் செய்ததாகவும் புகார் அளித்தார்.
இந்நிலையில், சசிகலா புஷ்பாவின் இரண்டாவது கணவரான வழக்கறிஞர் ராமசாமி சசிகலா புஷ்பாவிடம் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கறிஞர் ராமசாமி அனுப்பியுள்ள விவாகரத்து நோட்டீஸில் திருமணத்திற்குப் பின்பு சசிகலா புஷ்பா தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், இது தொடர்பாக டெல்லி, தூத்துக்குடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சசிகலா புஷ்பா அவரது இரண்டாவது கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் தற்போது மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

