Theme Check

உக்ரைன் ராணுவத்துக்கு ஆயுதங்கள் வழங்குவோம்- நேட்டோ திடீர் அறிவிப்பு !!

உக்ரைன் ராணுவத்துக்கு ஆயுதங்கள் வழங்குவோம்- நேட்டோ திடீர் அறிவிப்பு !!

உக்ரைன் ராணுவத்துக்கு ஆயுதங்கள் வழங்குவோம்- நேட்டோ திடீர் அறிவிப்பு !!
X

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா போரை நடத்தி வருகிறது. முன்னதாக, உக்ரைன் மீது படையெடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யாவுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ படை எச்சரிக்கை விடுத்தன. ஆனால் தற்போது உக்ரைனை ஆக்ரோ‌ஷமாக தாக்கி வரும் ரஷ்ய படைகளுக்கு எதிராக அமெரிக்காவும், நேட்டோவும் இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை.

இப்போதுவரை ஆலோசனை மட்டுமே நடத்தி வருகின்றன. உக்ரைனுக்கு உதவுவோம் என்றும் கூறி வருகின்றனர். இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும் போது, தங்களுக்கு எந்த நாடும் உதவவில்லை. தாக்குதலை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றன, என்று நேரடியாகவே வேதனையுடன் தெரிவித்தார்.

russia

இந்தநிலையில் உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்களை வழங்குவோம் என்று நேட்டோ படை தெரிவித்து உள்ளது. இது குறித்து நேட்டோ படையின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோன் பெர்க் கூறுகையில், உக்ரைன் அரசை கவிழ்க்க ரஷ்யா முயற்சித்து வருகிறது. நேட்டோ அமைப்பில் உள்ள சில நாடுகள் உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு உள்ளிட்ட ஆயுதங்களை வழங்குவதாக அறிவித்து உள்ளனர்.

நிலம், வான்வெளி, கடல் மற்றும் சிறப்பு நடவடிக்கை படைகளை நேட்டோ பிராந்தியத்தில் நிலை நிறுத்தி வருகிறோம். உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்களை அதிக அளவில் வழங்க முடிவு செய்திருக்கிறோம், என்றார்.

russia

இதற்கிடையே பிரான்ஸ் நாடு தனது 500 படை வீரர்களை ருமேனியாவுக்கு அனுப்பி உள்ளது. நேட்டோ படைக்கு வலு சேர்ப்பதற்காக 500 வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்து உள்ளது. அமெரிக்கா, உக்ரைனுக்கு நிதியுதவி வழங்குவதாக கூறியுள்ளது.



newstm.in

Next Story
Share it