Theme Check

சென்னை காரைக்கால் உள்ளிட்ட 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை..!!

சென்னை காரைக்கால் உள்ளிட்ட 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை..!!

சென்னை காரைக்கால் உள்ளிட்ட 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை..!!
X

சென்னை, மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் முதற்கட்டமாக தெரிவித்துள்ளார்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரியலூர், நீடூர், எலந்தங்குடி, உத்தங்குடி, கிளியனூர் ஆகிய 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியின் காரைக்கால் சுண்ணாம்புக்கார வீதியிலுள்ள வீட்டிலும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக 5 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

NIA

எந்த வழக்கு தொடர்பான சோதனை என்பது குறித்து அதிகாரிகள் எதையும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டியது தொடர்பான வழக்கில் சென்னையில் சாதிக் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it