இன்று தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு.. உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள் !

இன்று தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு.. உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள் !

இன்று தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு.. உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள் !
X

இந்திய அரசு ஆண்டு தோறும் நாடு முழுவதும் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கி திரைப்பட கலைஞர்களை பாராட்டியும், கவுரவப்படுத்தியும் வருகிறது.

குறிப்பாக ஒவ்வொரு துறை சார்ந்த கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகளையும் வழங்கியும் வருகிறது. இதில், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தேசிய விருதில், நடிகர் தனுஷ், விஜய் சேதுபதி, இயக்குநர் வெற்றி மாறன், இசை அமைப்பாளர் டி.இமான், நடிகர் பார்த்திபன், குழந்தை நட்சத்திரம் நாகவிஷால் ஆகியோருக்கு தேசிய விருதுகள் அளிக்கப்பட்டன.

national award

இந்நிலையில் சிறந்த திரைப்படங்களுக்கான 68ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விவரம் டெல்லியில் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளது.

இதனிடையே, நடிகர் சூர்யா நடித்து உலக சினிமா கவனத்தினை ஈர்த்து, ஆஸ்கார் வரை சென்ற சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் படங்களுக்கு விருதுகள் வழங்கப்படலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு படங்களும் சூர்யாவின் நடிப்போடு இயக்குனர்கள் மற்றும் துணை நடிகர்கள் என அனைவரது பணியும் பெரிதும் பாராட்டப்பட்டது. குறிப்பாக ஜெய்பீம் படத்தில் நடித்த நடிகர் மணிகண்டனுக்கு துணை நடிகருக்கான விருது கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

national award

இப்படங்கள் விருதினைப் பெரும் பட்சத்தில் அது நடிகர் சூர்யாவின் பிறந்த நாள் பரிசாக அமையக்கூடும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். நாளை நடிகர் சூர்யாவுக்கு பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.


newstm.in

Tags:
Next Story
Share it