Theme Check

நாடு முழுவதும் 95% மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்!!

நாடு முழுவதும் 95% மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்!!

நாடு முழுவதும் 95% மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்!!
X

நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற நீட் தேர்வை 95% பேர் தேர்வு எழுதியதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக 'நீட்' எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 'நீட்' தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது.

தமிழகத்தில் தேர்வு எழுதுவதற்கு ஏராளமான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். மாணவர்கள் நண்பகல் 11.40 மணி முதல் 1.30 மணி வரை தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு வந்த யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

neet

2 மணிக்கு தேர்வு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற்றது. தேர்வு அறைக்குள் மாணவ-மாணவிகள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற நீட் தேர்வை 95% பேர் தேர்வு எழுதியதாகவும் 18,72,343 பேர் விண்ணப்பித்ததில் 17,78,725 பேர் மட்டுமே வருகை தந்து தேர்வை எழுதினர் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

newstm.in

Next Story
Share it