நவீனின் கடைசி நிமிடங்கள்.. 'உணவுக்கு பணம் அனுப்பிய பின் ஃபோன் எடுக்கவில்லை' என கதறும் நண்பர்கள்
நவீனின் கடைசி நிமிடங்கள்.. 'உணவுக்கு பணம் அனுப்பிய பின் ஃபோன் எடுக்கவில்லை' என கதறும் நண்பர்கள்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்-யில் உள்ள பெக்கிடோவாவின் அடுக்குமாடி குடியிருப்பின் அடித்தளத்தில் தங்குமிடத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர் நவீன் தனது நண்பர்களுடன் தங்கியுள்ளார். அங்கு மேலும் அதிக நாட்கள் தங்க முடிவு செய்ததால் உணவு வாங்க நவீன் வெளியே சென்றார்.
உக்ரைன் நேரப்படி மதியம் 3 மணி முதல் காலை 6 மணி வரையிலான ஊரடங்கு நேரம் முடிந்ததும் உணவு வாங்க வெளியே திட்டமிட்டார். கர்நாடக மாநிலம், ஹாவேரி மாவட்டம், ரானேபென்னூர் தாலுகாவில் உள்ள சாலகேரி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன். கார்கிவ் தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மருத்துவம் படித்து வந்தார். உக்ரைன் நேரப்படி காலை 6.30 மணியளவில் நவீன் வசிப்பிட கட்டடத்தில் இருந்து புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த இடத்தில் இருந்து சில அடி தூரத்தில் பல்பொருள் அங்காடி உள்ளது.
அப்போது, அவருடன் தங்கியிருந்த ஸ்ரீகாந்த் தனியார் செய்தி நிறுவனத்துக்கு மேலும் கூறுகையில், நான் பணத்தை நவீனின் செல்போன் கணக்குக்கு அனுப்பினேன். 5 அல்லது பத்து நிமிடங்களுக்குப் பிறகு நவீனை தொடர்பு கொள்ள முயற்சித்தேன், அவர் என் அழைப்புகளை எடுக்கவில்லை. பலமுறை தொடர்பு கொண்டேன். அதன் பிறகு நான் அவரை உள்ளூர் எண்ணில் தொடர்பு கொண்டு அழைக்க முயற்சித்தேன். அப்போதும் என் அழைப்புகளை எடுக்கவில்லை. பின்னர் யாரோ ஒருவர் எனது அழைப்பை எடுத்தார், அவர் யுக்ரேனிய மொழியில் பேசினார். அது எனக்கு புரியவில்லை, என்றார்.
தங்குமிடத்தில் இருந்த உள்ளூரைச் சேர்ந்த பக்கத்து வீட்டுக்காரர் உதவியுடன் மறுமுனையில் பேசியவர் 'என்ன கூறுகிறார்?' என கேட்டு கூறுமாறு தெரிவித்தேன். அப்போது, மறுமுனையில் பேசியவர், உங்கள் நண்பர் இறந்துவிட்டதாக கூறியதாக தெரிவித்தார்.
நவீன் மருத்துவ படிப்பின் மூன்றாம் ஆண்டில் 95 சதவீதம் மதிப்பெண் பெற்றான். மிகவும் படிப்பாளி மற்றும் மிகவும் அடக்கமானவர் என்றும் ஸ்ரீகாந்த் கூறினார். இந்திய தூதரகத்தில் இருந்து யாரும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. நவீனின் உடல் எங்குள்ளது என்றும் தெரியவில்லை. முன்னதாக காலையில்தான் தமது மகனுடன் செல்பேசியில் பேசியதாக நவீனின் தந்தை சேகரப்பா கூறினார். தினமும் இரண்டு அல்லது மூன்று முறை பெற்றோரை தொடர்பு கொள்வதை நவீன் வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும் சேகரப்பா பெரும் சோகத்துடன் கூறினார்.
newstm.in