30 லட்ச ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!!
30 லட்ச ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!!

சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.
நக்சலைட்டுகள் செய்த குற்றங்களின் அடிப்படையில் தலைக்கு அரசு சார்பில் லட்சக்கணக்கில் சன்மானம் அறிவிக்கப்படுவது உண்டு. அப்படி சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

மத்தியபிரதேசத்தின் பாலஹட் மாவட்டம் பஹிலா என்ற பகுதியில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் போலீசார் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் உள்பட 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட நக்சலைட்டுகளில் நாகேஷ் என்பவரின் தலைக்கு ரூ. 15 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதே போல் மனோஜ் மற்றும் ராமே என்ற பெண்ணின் தலைக்கு தலா ரூ.8 லட்சமும் என மொத்தம் ரூ 30 லட்சம் சன்மானம் அறிவிக்கப்படிருந்தது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
newstm.in

