நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்.. அதிகாரப்பூர்வமாக வெளியானது புகைப்படம்..!

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்.. அதிகாரப்பூர்வமாக வெளியானது புகைப்படம்..!

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்.. அதிகாரப்பூர்வமாக வெளியானது புகைப்படம்..!
X

இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாராவின் திருமணம் இன்று (9-ம் தேதி) காலை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், நடிகர்கள் ஷாருக் கான், ரஜினிகாந்த், கார்த்தி, சரத்குமார், ராதிகா, தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்ட இந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

திருமண நிகழ்வின் போது புகைப்படங்கள் எடுக்க அனுமதிக்கப்படாததால் சமூக வலைதளங்களில் திருமண புகைப்படங்கள் வெளியாகவில்லை.

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் இயக்குநர் கௌதம் மேனன் தலைமையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திருமணம் முடிந்ததை அறிவிக்கும் வகையில் நயன்தாராவுடன் உள்ள புகைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


மேலும், கடவுள், பிரபஞ்சம், எங்களது பெற்றோர் மற்றும் சிறந்த நண்பர்கள் அனைவரின் ஆசிர்வாதத்துடன் நயன்தாராவை திருமணம் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Tags:
Next Story
Share it