காதலர் தினத்தில் காதலனுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ்.. வைரல் வீடியோ !!

காதலர் தினத்தில் காதலனுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ்.. வைரல் வீடியோ !!

காதலர் தினத்தில் காதலனுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ்.. வைரல் வீடியோ !!
X

திருமணம் செய்யாமலேயே தமிழ் திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருகின்றனர் நயன்தாரா- விக்னேஷ் சிவன். திரைப்பட இயக்குநரான விக்னேஷ் சிவன், சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு விஜய் சேதுபதியை வைத்து நானும் ரவுடி தான், சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கி பிரபலமானார். சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தை தயாரித்து இருந்தார்.

nayan

தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, ஆகியோர் நடிப்பில் ‘காத்து வாக்குல இரண்டு காதல்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். நானும் ரவுடி தான் படத்தின்போது நயன்தாரவும் விக்னேஷ் சிவனும் காதலர்கள் ஆகினர். அதன்பின்னர் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக பறந்து காதலை வளர்த்து வருகின்றனர். எப்போது திருமணம் என்ற கேள்வியும் பரபரப்பாக கேட்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், காதலர் தினமான இன்று நடிகை நயன்தாரா அவருடைய காதலர் விக்னேஷ் சிவனுக்கு பூங்கொத்து கொடுத்து காதலர் தின வாழ்த்து கூறியுள்ளார். நயன்தாரா பூங்கொத்து கொடுக்கும் விடியோவை அவருடைய சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்த விக்னேஷ் சிவன், சில விஷயங்களை குறிப்பிட்டிருக்கிறார்.

nayan

அதில், அவள் வந்து பூங்கொத்து கொடுத்தது முதல் முறை போல் இருக்கிறது, எனக் குறிப்பிட்டு அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோவை இவர்களுடைய ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

newstm.in


Tags:
Next Story
Share it