Theme Check

நயன்தாரா புகார்.. போலி லேபிள் ஒட்டி பொருட்கள் சப்ளை செய்தவர் கைது..!

நயன்தாரா புகார்.. போலி லேபிள் ஒட்டி பொருட்கள் சப்ளை செய்தவர் கைது..!

நயன்தாரா புகார்.. போலி லேபிள் ஒட்டி பொருட்கள் சப்ளை செய்தவர் கைது..!
X

புதுச்சேரி பெரிய மார்க்கெட், ரங்கபிள்ளை வீதி, பாரதி வீதியில் செயல்படும் கடைகளில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி டீத்தூள், சலவை பவுடர் விற்பனை செய்வது தெரியவந்தது.

இது குறித்து, அந்த நிறுவனத்தின் சட்ட ஆலோசகரான பெங்களூருவைச் சேர்ந்த நயன்தாரா டெமி என்பவர் பெரிய கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் கடைகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது, அங்கு பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியான லேபிள் ஒட்டி டீத்தூள், சலவை பவுடர் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்தக் கடைகளில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள போலி லேபிள் ஒட்டிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக பெரியகடை போலீசார் விசாரணை மேற்கொண்டதில், புதுச்சேரி அண்ணா நகரைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் மகன் கண்ணன் (38) என்பவர் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி லேபிள் ஒட்டி பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவருடைய குடோனில் பதுக்கி வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
Share it