Theme Check

நீட் விலக்கு மசோதா.. முதல்வர் சொன்ன முக்கிய தகவல்..!

நீட் விலக்கு மசோதா.. முதல்வர் சொன்ன முக்கிய தகவல்..!

நீட் விலக்கு மசோதா.. முதல்வர் சொன்ன முக்கிய தகவல்..!
X

நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், “இந்த அரசு எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகளை பற்றி நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.

இதன் முதல் படியாக நாம் அனைவரும் இணைந்து சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு தொடர்பான சட்ட முன்வடிவை மீண்டும் தமிழக அரசுக்கே அனுப்பி, இதுகுறித்து மறுபரிசீலனை செய்யுமாறு ஆளுநர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி நீட் விலக்கு மசோதா குறித்து விவாதித்து, சில நாட்களிலேயே ஜனாதிபதி ஒப்புதல் பெறுவதற்கு மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மசோதா தொடர்பாக ஆளுநரை நேரில் சந்தித்து, தாமதிக்காமல் சட்ட முன்வடிவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து சட்ட முன்வடிவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.

அதன் பின்னர், அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதுகுறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த தொடர் முயற்சிகளின் பலனாக, ஒரு வரலாற்று நிகழ்வாக நாம் சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்த நீட் விலக்கு மசோதாவை, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற ஏதுவாக தமிழக ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார்.

இந்த தகவலை, ஆளுநரின் செயலர் சில மணி நேரங்களுக்கு முன்பாக தொலைபேசி வாயிலாக தெரிவித்ததை மகிழ்ச்சியோடு கூறிக்கொள்கிறேன்” என்று முதல்வர் தெரிவித்தார்.

Next Story
Share it