Theme Check

இந்திய பெண்கள் அணிக்கு புதிய கேப்டன்..!!

இந்திய பெண்கள் அணிக்கு புதிய கேப்டன்..!!

இந்திய பெண்கள் அணிக்கு புதிய கேப்டன்..!!
X

மகளிர் கிரிக்கெட் உலகில் பெரும் சாதனைகளை படைத்த, சிறந்த வீராங்கனையாக திகழ்ந்தவர் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ். எத்தகைய சூழலையும் தனது பேட்டிங் ஆற்றலால் மாற்றக்கூடியவர் என பல போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி உலக கிரிக்கெட் ரசிகர்களையும், வீரர், வீராங்கனைகளையும் வியப்படையச் செய்தவர்.

தமிழர் மரபை சேர்ந்த மிதாலி ராஜ் கடந்த 1999, ஜூன் 26 அன்று, தனது 16 வயதில் அயர்லாந்து அணிக்கு எதிராகச் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் அறிமுகமாக 23 ஆண்டுகள் கடந்துவிட்டன. 2000, 2005, 2009, 2013, 2017 மற்றும் 2022 என 6 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற சாதனையையும் மிதாலி ராஜ் படைத்துள்ளார்.

இந்நிலையில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.

இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் ஓய்வு பெற்றதை அடுத்து இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags:
Next Story
Share it