தமிழக வரலாற்றில் புதிய உச்சம்.. ஒரு கேண்டி விலை ரூ.1 லட்சமாக அதிகரிப்பு..!
தமிழக வரலாற்றில் புதிய உச்சம்.. ஒரு கேண்டி விலை ரூ.1 லட்சமாக அதிகரிப்பு..!

விலைவாசி உயர்வு பட்டியலில் பஞ்சு இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், பஞ்சு விலையில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்பட்டுள்ளதால், இந்த ஆண்டில் மட்டும் 40 சதவீதம் வரை அதன் விலை உயர்ந்துள்ளது.
இதனால் நூற்பாலைகள், ஜவுளி உற்பத்தியாளர்கள் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளன. ஒரு ஆண்டுக்குள் பருத்தி விலை இருமடங்கு அதிகரித்துள்ளது. அதைக் கட்டுப்படுத்தி பருத்தி இறக்குமதி மீது இந்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த பருத்தி உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 40 சதவீதத்திற்கும் மேலாக உள்ளது . இப்போது வாரத்துக்கு ஐந்து நாட்கள் மட்டுமே இயங்கி வருகின்றன.
இந்நிலையில் ஒரு கேண்டி பஞ்சு விலை ரூ.1 லட்சமாக அதிகரித்துள்ளது. ஒரே ஆண்டில் பஞ்சு விலை இருமடங்காக உயர்ந்துள்ளதால் ஜவுளித்துறை கடும் பாதிப்படைந்துள்ளது.
பஞ்சு விலையை பொறுத்தவரை கேள்வி ஒன்றுக்கு 37 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை இருந்த நிலையில் தற்போது ஒரு லட்சம் வரை உயர்ந்துள்ளது.
பஞ்சு விலை உயர்வால் குறித்த காலத்தில் ஜவுளி உற்பத்தி செய்ய முடியாததால் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்டரை ரத்து செய்து விட்டனர். பஞ்சு விலை உயர்வால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 30 சதவீத நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால் மேலும் 50 சதவீத நூற்பாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்படும் என ஜவுளித் துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்த அளவுக்கு நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் பஞ்சு விலை உயர்வால் உற்பத்தி பாதிக்கப்பட்டு, ஜவுளி விலையும் கடுமையாக உயரும் என்று தெரிகிறது.
பஞ்சு விலை உயர்வு ஆலைகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினாலும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது.

