தமிழகத்தில் புதிய வகை கொரோனா.. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!
தமிழகத்தில் புதிய வகை கொரோனா.. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

தமிழகத்தில் ஒருவருக்கு ஓமைக்ரான் பிஏ4 கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “கொரோனோ தொடர்பாக 7 வகை வைரஸ் உருவானது. அதில் பிஏ 4 என்ற புதிய வகை கொரோனா தொற்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது. ஓமைக்ரானில் உள்ள 7 வகைகளில் பிஏ 4 ஒரு வகை.
தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, தற்போது அவருக்கு குணமாகிவிட்டது.
அவருடன் தொடர்பில் இருந்த எவருக்கும் தொற்று பரவவில்லை. சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஆப்ரிக்கா நாடுகளில் கண்டறியப்பட்ட பிஏ 4 கொரோனா வகை தமிழகத்திலும் பரவியது கண்டறியப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் ஓமைக்ரான் பிஏ 4 கொரோனா வகை பரவி இருக்கிறதா என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, இந்தியாவில் கடந்த வியாழக்கிழமை பிஏ-4 வகை கொரோனா தொற்றின் முதல் பாதிப்பு ஹைதராபாத்தில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

