சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா!!
சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா!!

சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அங்கு மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டுல் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதன் மூலம் பலகோடி மக்கள் பாதிப்படைந்தும், பல லட்சம் மக்களின் உயிரை காவு வாங்கியது.
இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது. ஒருபக்கம் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் அண்மை காலமாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், சீனாவில் மீண்டும் புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வடகிழக்கில் தொழிற்சாலைகள் நிறைந்த சாங்சன் பகுதியில் புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. ஏறக்குறைய 90 லட்சம் மக்கள் வசித்து வரும் இந்த நகரில், வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதையடுத்து, இந்த சாங்சுன் நகர் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ் எந்த மாதிரியானது, அதன் பரவும் வேகம் என்ன குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in

