Theme Check

திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் சரமாரி வெட்டி கொலை- கணவர் வெறிச்செயல் !!

திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் சரமாரி வெட்டி கொலை- கணவர் வெறிச்செயல் !!

திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் சரமாரி வெட்டி கொலை- கணவர் வெறிச்செயல் !!
X

தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பொன்ராஜ்( 25). இவருக்கும் தாளமுத்து நகர் அருகே உள்ள பாலதண்டாயுத நகரைச் சேர்ந்த மாரிச்செல்வி (19) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. பொன்ராஜ், கார் டிரைவராக உள்ளார். கணவன், மனைவி இருவரும் தூத்துக்குடி அண்ணா நகரில் வசித்து வந்தனர்.

மாரிச்செல்வி அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டே இருப்பாராம். இதை அவரது கணவர் பொன்ராஜ் கண்டித்துள்ளார். இதனால் தம்பதியர் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொன்ராஜ், மனைவியை கடந்த வாரம் அவரது தாயார் மாரியம்மாள் வீட்டில் விட்டு விட்டாராம்.

cellphone

இந்நிலையில் நேற்று மாலை மாரியம்மாள், மருமகன் பொன்ராஜுக்கு போன் செய்து, மகளை அழைத்து வந்து ஒருவாரம் ஆகி விட்டது. எப்போது வந்து கூட்டிச் செல்கிறீர்கள், என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், அவருடன் எனக்கு வாழ பிடிக்கவில்லை. இனிமேல் உன் மகள் எனக்கு வேண்டாம், அவள் மற்ற ஆணுடன் போனில் தொடர்பு வைத்துள்ளார், என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டார்.

இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை தாளமுத்து நகரில் மாமியார் வீட்டிற்கு வந்த பொன்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் முத்துக்குமார் (22), மந்திரமூர்த்தி ஆகியோர் கதவை தட்டி அங்கு தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பியுள்ளனர். பின்னர் மாரிசெல்வியை வீட்டிற்கு வெளியே அழைத்து வந்த பொன்ராஜ், அவரிடம் பேசுவது போல் நடித்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டினார். தலை, கழுத்து, கையில் வெட்டுப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

cellphone

மேலும் இதனை தடுக்க வந்த மாரியம்மாளுக்கும் கையில் வெட்டு விழுந்தது. இதையடுத்து அவர்களை பிடிக்க முயன்ற சண்முகம், அவரது மருமகள் பேச்சியம்மாள் ஆகியோரையும் பொன்ராஜ் உள்ளிட்ட 3 பேரும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

இதுதொடர்பாக தாளமுத்துநகர் போலீசார் வழக்குபதிவு செய்து மனைவியை கொலை செய்த பொன்ராஜ் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகின்றனர். திருமணமாகி 5 மாதமே ஆன நிலைலயில் புதுப்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it