அடுத்த அதிரடி! அமைச்சரின் பெண் உதவியாளரும் கைது!!
அடுத்த அதிரடி! அமைச்சரின் பெண் உதவியாளரும் கைது!!

ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பாக மேற்குவங்காள அமைச்சரின் பெண் உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அம்மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை இன்று காலை கைது செய்தது.
சோதனையின் போது அமைச்சரின் நெருங்கிய உதவியாளரிடமிருந்து ரூ.20 கோடி கைபற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.

அதன்பிறகு அவர் கைது செய்யப்பட்டார். அவர் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தாவில் அமைச்சரின் உதவியாளர் அர்பிதா முகர்ஜியின் குடியிருப்பில் இருந்து அமலாக்கத்துறை ரூ.21 கோடி ரூபாயை கைபற்றியது. மேலும் மொபைல்களும் கைபற்றபட்டன. இதனையடுத்து அர்பிதா முகர்ஜியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
newstm.in

