Theme Check

வடமாநிலத்தில் மீண்டும் நிர்பயா பாலியல் சம்பவம்... பேருந்தில் சிறுமிக்கு நடந்த கொடூரம் !

வடமாநிலத்தில் மீண்டும் நிர்பயா பாலியல் சம்பவம்... பேருந்தில் சிறுமிக்கு நடந்த கொடூரம் !

வடமாநிலத்தில் மீண்டும் நிர்பயா பாலியல் சம்பவம்... பேருந்தில் சிறுமிக்கு நடந்த கொடூரம் !
X

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கு. கடந்த 2012ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பிசியோதெரபி மாணவி கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டார். நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கின் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதேபோல், சமீப காலமாக இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், தற்போது பீகாரில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் பேருந்துக்குள் வைத்து சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ததாக பேருந்து டிரைவர் மற்றும் கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.

bus bihar

பீகார் மாநிலம் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள பெட்டியா பேருந்து நிலையத்தில் சிறுமி ஒருவர் பாட்னா செல்ல நின்று உள்ளார். பாட்னாவுக்கு அழைத்துச் செல்வதாக கூறி கண்டக்டரும், டிரைவரும் அவரை பேருந்தில் ஏற்றி உள்ளனர். பின்னர் அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து உள்ளனர். இதில் சிறுமி மயக்கம் அடைந்து உள்ளார்.

பைபாஸ் சாலையில் ஓடும் பேருந்தில் வைத்து டிரைவர், நடத்துனர் மேலும் ஒருவர் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்து பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. கொடூரர்களின் பிடியில் இருந்து சிறுமியை அரை மயக்கத்தில் மீட்ட போலீசார் பேருந்தையும் பறிமுதல் செய்தனர். சிறுமியின் புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

bus bihar

தற்போது இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஏற்கனவே ஹைதராபாத் சம்பவம் நாடு முழுவதும் பற்றி எரியும் நிலையில் தற்போது பீகார் சம்பவம் பெண்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it