Theme Check

மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை.. மம்தா பானர்ஜி ஆரூடம்..!

மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை.. மம்தா பானர்ஜி ஆரூடம்..!

மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை.. மம்தா பானர்ஜி ஆரூடம்..!
X

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைத்து நேற்றுடன் (30-ம் தேதி) 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி அம்மாநிலத்தின் புருலியா மாவட்டத்தில் இன்று நடந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது, ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அவர், “பாஜக தலைமையிலான மத்திய அரசு கலப்படம் நிறைந்தது. அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய பணமதிப்பிழப்பு போன்ற முடிவுகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை பாஜக அரசு சீரழித்து விட்டது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகப்பெரிய ஊழல். மக்களுக்கு எதிரான மத்திய பாஜக அரசால் நாட்டு மக்கள் சலிப்படைந்து விட்டனர்.

2024 மக்களவை தேர்தலில் பாஜக நுழைய முடியாது என்பதை நான் தெளிவாக கூறிக்கொள்கிறேன். பாஜக வெளியேற்றப்பட வேண்டும். மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை” என்றார்.

Next Story
Share it