வரிசையில் நின்றாலும் 2 நாட்களுக்கு டீசல் இல்லை.. அரசு அறிவிப்பு

வரிசையில் நின்றாலும் 2 நாட்களுக்கு டீசல் இல்லை.. அரசு அறிவிப்பு

வரிசையில் நின்றாலும் 2 நாட்களுக்கு டீசல் இல்லை.. அரசு அறிவிப்பு
X

இலங்கையில் 2 நாட்களுக்கு டீசல் இல்லை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் இதுவரை இல்லாத அளவில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதன்காரணமாக, அங்கு பால், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. அதேபோல், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. எனினும், பெட்ரோல், டீசலுகும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

srilanka petrol

இலங்கையில் தற்போது ஒரு கிலோ அரிசி 448 இலங்கை ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.263-க்கு விற்கப்படுகிறது. சர்க்கரை கிலோ ரூ.280 ஆக உள்ளது. ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1.41 லட்சத்துக்கு விற்பனை ஆகிறது. இதன்மூலம் அங்குள்ள மக்கள் படும் அவதிகள் என்னவென்று உணர்ந்துகொள்ள முடிகிறது.

இந்த நிலையில், இலங்கையில் 2 நாட்களுக்கு டீசல் இல்லை என்றும், இதனால் தேவையின்றி வரிசையில் நிற்க வேண்டாம் என்றும் அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. சிபேட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்றும் நாளையும் டீசல் பெற முடியாது என பெட்ரோலிய கூட்டமைப்பு தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அதேபோல், மார்ச் 30ஆம் தேதி (இன்று) முதல் மின்சார விநியோகத்தில் 10 மணிநேரம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

srilanka petrol

அதேநேரத்தில், இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 37,500 மெட்ரிக் டன் டீசலை தரையிறக்க முடியவில்லை என பெட்ரோலிய கூட்டமைப்பு தலைவர் சுமித் விஜேசிங்க கூறியுள்ளார். அத்தியாவசிய தேவைகளுக்கான டீசல் கையிருப்பில் உள்ளது. தட்டுப்பாடின்றி பெட்ரோல் விநியோகம் நடைபெறும் என பெட்ரோலிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it