மாயமில்ல, மந்திரமில்ல, பாருங்க பாருங்க.. ஜோ ரூட்டின் மேஜிக்.. VIDEO !!

மாயமில்ல, மந்திரமில்ல, பாருங்க பாருங்க.. ஜோ ரூட்டின் மேஜிக்.. VIDEO !!

மாயமில்ல, மந்திரமில்ல, பாருங்க பாருங்க.. ஜோ ரூட்டின் மேஜிக்.. VIDEO !!
X

பிடிமானம் ஏதும் இல்லாமல் தானாக களத்தில் நிற்கும் ஜோ ரூட்டின் பேட் வீடியோ ஒன்று நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி வெற்றிபெற்றது. இதோடு இப்போட்டியில் அவர் பல சாதனைகளையும், மேஜிக் ஒன்றையும் செய்து ரசிகர்களை வியக்கவைத்துள்ளார்.

ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை நேற்று எட்டியிருந்தார். உலக அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த மைல்கல்லை எட்டிய 14ஆவது வீரராக இணைந்துள்ளார். 26 சதம் மற்றும் 53 அரை சதங்களை இதில் அடங்கும். இங்கிலாந்து அணிக்காக அனைத்து பார்மெட் கிரிக்கெட்டையும் சேர்த்து 17000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

joe root

இந்நிலையில், நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் ரூட் நிற்கும் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. எந்த உதவியும் இல்லாமல் அவரது பேட் தரையில் நிற்கிறது. இந்த மாயம் இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் நடைபெற்றுள்ளது. அந்த இன்னிங்ஸின் 72-வது ஓவரை நியூசிலாந்து வீரர் ஜேமிசன் வீசினார். அந்த ஓவர் முழுவதும் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் நின்றார் ரூட். நான்காவது பந்தை ஜேமிசன் வீசிய போது ரூட் தனது பேட்டின் ஹேண்டிலை பிடித்திருக்கவில்லை. கிட்டத்தட்ட ஐந்து நொடிகள் வரை அவர் பேட்டை பிடிக்கவே இல்லை. பேட் கீழே விழவும் இல்லை. அதன்பின்னர் பேட்டை பிடித்துக்கொண்டு ஓட தொடங்கினர்.

joe root

அந்தக் காட்சி தற்போது கவனத்தை பெற்றுள்ளது. பிடிமானம் ஏதும் இல்லாமல் சில நொடிகள் அப்படியே ஸ்டாண்டு போட்டு நேராக நிறுத்தி வைத்தது போல பேட் நின்றது. இது குறித்து தான் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் தங்களது கருத்தை சொல்லி வருகின்றனர். மாயமில்ல, மந்திரமில்ல. பாருங்க பாருங்க.. நல்லா பாருங்க.. என ஒரு மேஜிக் கலைஞர் போல ரூட்டை சித்தரித்து பலரும் சுவையான கமாண்ட் செய்து வருகின்றனர்.



newstm.in


Tags:
Next Story
Share it