இனி, அம்பேத்கர் பிறந்தநாள் இல்லை.. சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு..!
இனி, அம்பேத்கர் பிறந்தநாள் இல்லை.. சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு..!

தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியபோது, “அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும்” எனக் கூறினார்.
இன்று இதுகுறித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும். அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள், செம்பதிப்பாக தமிழில் வெளியிடப்படும்.
![]()
அம்பேத்கர் மணிமண்டபத்தில் வெண்கலத்தில் முழு உருவச் சிலை அமைக்கப்படும். அண்ணல் அம்பேத்கர், வேண்டாததை நீக்கிய சிற்பி; வேண்டியதை சேர்த்த ஓவியர்” என்றார்.
சமத்துவ நாள் குறித்த அறிவிப்பை தொடர்ந்து, ‘தமிழகம் முழுவதும் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்படும்’ என விதி எண் 110-ன் கீழ் முதல்வர் அறிவித்தார்.
முன்னதாக, கடந்த 2022-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலில் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் ஜெயந்தி என்று குறிப்பிடப்பட்டுதான் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ், பெரியார் பிறந்த செப்டம்பர் 17-ம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

