இனி SANTRO இல்லை.. கார் தயாரிப்பை மீண்டும் நிறுத்திய HYUNDAI !
இனி SANTRO இல்லை.. கார் தயாரிப்பை மீண்டும் நிறுத்திய HYUNDAI !

உலகம் முழுவதும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப புதுபுதுக் கார்கள் வந்து கொண்டே இருக்கிறது. இதனால் பழைய மாடல் கார்களை பல நிறுவனங்கள் தயாரிப்பதை நிறுத்தி வருகின்றன. இந்த வரிசையில் தற்போது ஹூண்டாய் மோட்டார்ஸ் தயாரிப்பான சான்ட்ரோ காரும் இடம் பிடித்துள்ளது.
இந்த கார் கடந்த 2018 ஆம் ஆண்டு மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இதன் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டதாக தெரிகிறது. இந்த கார் மாருதி 800 காருக்கு போட்டியாக முதல் முதலில் 2000களில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த கார் மாருதி காரை விட அதிக வசதிகள் மற்றும் திறன் கொண்டிருந்தது. அதன் பிறகு ஆண்டுகள் செல்ல செல்ல இந்த காரின் விற்பனை குறைந்து நிறுத்தப்பட்டது. 4 ஆண்டுகள் கழித்து 2018ம் ஆண்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்ட சான்ட்ரோ காரை அறிமுகம் செய்தாலும் இது வாடிக்கையாளர்களைப் பெரிதாகக் கவரவில்லை. ரூ. 4.90 முதல் 6.25 லட்சம் வரை விலை இருந்தது.

இந்த விலையில் சான்ட்ரோ காரைவிட சொகுசான கார்கள் இருந்ததால். சான்ட்ரோவால் போட்டிப் போடமுடியவில்லை. இந்நிலையில் சான்ட்ரோ தயாரிப்பை மீண்டும் நிறுத்துகிறது ஹூண்டாய். தனது கார் விற்பனை பட்டியலில் இருந்துசான்ட்ரோ காரை நீக்கியுள்ளது. இதையடுத்து சான்ட்ரோ காரின் ரசிகர்கள் ’போய் வாடா என் பொலி காட்டு ராசா' அதற்குப் பிரியா விடை கொடுத்து வருகின்றனர்.
முக்கியமாக இந்தியாவில் தற்போது பலர் SUV கார்களையே அதிகம் விரும்புகிறார்கள்.இதன் காரணமாக கடந்த இரு ஆண்டுகளில் ஹாட்ச் பேக் கார்களின் விற்பனை பல மடங்கு சரிந்துவிட்டது. மேலும் தற்போது M1 ரக கார்களில் 6 ஏர் பேக் வசதி கட்டாயம் இடம்பெறவேண்டும் என்பதால் பல நிறுவனங்கள் தங்களின் சிறிய ரக கார்களை நிறுத்திவருகின்றன. சான்ட்ரோ கார் இதனை ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்டதில் இந்த கார் ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு அடையாளமாக உள்ளது. தற்போது இந்த கார் நிறுத்தப்பட்டுள்ளது.
newstm.in

