இனி மருந்துகள் இல்லை.. இலங்கை அரசுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை
இனி மருந்துகள் இல்லை.. இலங்கை அரசுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை

இலங்கையில் உயிர்காக்கும் மருந்துகள் ஏறக்குறைய தீர்ந்துவிட்டதாகவும், இதனால் நாட்டில் இனி கொரோனாவைவிட உயிர்ப்பலி அதிகரிக்கும் என்று அந்நாட்டு மருத்துவ சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் அந்நியச் செலவாணி கையிருப்பு குறைந்துள்ளதால் அங்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உணவுப் பற்றாக்குறை, எரிபொருள் பற்றாக்குறை என மக்கள் மிகவும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். மேலும் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்குக உயர்ந்துள்ளது. இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு அரசியல் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.
அதிபர் பதவிவிலகக்கோரி நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் பொருளாதார நெருக்கடியின் விளைவாக, இலங்கையில் உயிர்காக்கும் முக்கிய மருந்துகள் தீர்ந்துபோகும் நிலையில் இருப்பதாகவும் மருந்துகள் இல்லையெனில் ஏராளமான உயிரிழப்புகள் நிகழும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கொரோனா உயிரிழப்புகளைவிட பொருளாதார நெருக்கடி அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் இனி இறக்குமதி செய்யப்பட்ட மருத்துவக் கருவிகள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளைப் பெற முடியாது என்றும் இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
newstm.in