இனி பள்ளிகளில் கிடையாது.. தமிழக அரசு திடீர் அறிவிப்பு..!
இனி பள்ளிகளில் கிடையாது.. தமிழக அரசு திடீர் அறிவிப்பு..!

இந்த ஆண்டு முதல், பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவுகள் செய்யப்பட மாட்டாது என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் போது, அதே பள்ளியில் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மேற்கொள்ளப்பட்டு வந்தது.
மேலும், மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய நாளில் இருந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் பதிவு செய்யும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பதிவு மூப்பு எண் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இந்த ஆண்டு முதல் பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுவதாக வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில், வேலைவாய்ப்பு பிரிவு இணையதளம் மூலம் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை நேரடியாக அவரவர் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு முதல் பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவுகள் செய்யப்பட மாட்டாது. மாணவ - மாணவியர் மதிப்பெண் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம். அவர்களுக்கு பதிவு அட்டை வழங்கப்படும்.
இல்லையென்றால், https://tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தில் மாணவர்களே நேரடியாக பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், இ-சேவை மையங்கள் மூலமும் பதிவு செய்து கொள்ளலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

