Theme Check

இனி உயரும் கட்டணம்! மிடில் கிளாஸ் மக்கள்தான் பாவம்!!

இனி உயரும் கட்டணம்! மிடில் கிளாஸ் மக்கள்தான் பாவம்!!

இனி உயரும் கட்டணம்! மிடில் கிளாஸ் மக்கள்தான் பாவம்!!
X

தனியார் மருத்துவமனை அறைகளுக்கான ஜிஎஸ்டி வரியை உயர்த்துவது நடுத்தர மக்களை பாதிக்கும் என பல்வேறு தரப்பினரும் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரம் நடைபெற்ற 47ஆவது ஜிஎஸ்டி கவுன்சிலில் தனியார் மருத்துவமனைகளில் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் வசூலிக்கப்படும் ஐசியு அல்லாத படுக்கைகளுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவு நடுத்தர மக்களையே அதிகமாக பாதிக்கும் என பார்க்கப்படுகிறது. தேசிய மாதிரி ஆய்வு தரவுகள் படி 62% மக்கள் தனியார் மருத்துவமனைகளை நாடி வருகின்றனர்.

private hospital

இந்நிலையில் 5% ஜிஎஸ்டி வரி விதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால் பொதுமக்கள் மருத்துவமனைகளில் இனி அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இந்திய மருத்துவ சங்கம் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறது.

ஏற்கெனவே மருத்துவமனை உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. தற்போது சாதாரண மக்களை நேரடியாக பாதிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் நேரடியாக மருத்துவத்துக்கு செலவு செய்யும் விகிதம் அதிகரித்துள்ளது.

newstm.in

Next Story
Share it