18 வயதுக்கு கீழ் ரீசார்ஜ் இல்லை.. தமிழகத்தில் இது முதல்முறை..!
18 வயதுக்கு கீழ் ரீசார்ஜ் இல்லை.. தமிழகத்தில் இது முதல்முறை..!

செல்போன் பயன்பாட்டால் பல்வேறு குற்றச் செயல்களும், விழிப்புணர்வு இல்லாத மரணங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
அதிலும் குறிப்பாக, பள்ளி மாணவர்களிடையேயான செல்போன் பயன்பாடு தற்போது மோசமான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இதனை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தபோதிலும், மாணவர்களிடையே செல்போன் மோகம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், ‘18 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு செல்போன் ரீசார்ஜ் மற்றும் சர்வீஸ் செய்து கொடுப்பதில்லை. மேலும், பில் இல்லாமல் கொண்டுவரப்படும் செல்போன்களை வாங்க மாட்டோம்.
மாவட்டம் முழுவதும் ஒரே பொருள்; ஒரே விலை திட்டத்தில் அனைத்து கடைகளில் ஒரே விலையில் விற்பனை செய்யப்படும்’ என செங்கல்பட்டு மாவட்ட செல்போன் சர்வீஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.
மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ள இந்த புதிய முறை விரைவில் தமிழகம் முழுவதும் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

