Theme Check

“யார் காலில் விழுவதற்காகவும் டெல்லி செல்லவில்லை” : முதல்வர் அதிரடி!!

“யார் காலில் விழுவதற்காகவும் டெல்லி செல்லவில்லை” : முதல்வர் அதிரடி!!

“யார் காலில் விழுவதற்காகவும் டெல்லி செல்லவில்லை” : முதல்வர் அதிரடி!!
X

யார் காலில் விழுவதற்காகவும் டெல்லி செல்லவில்லை, தமிழகத்தின் உரிமைக்காகவே சென்றேன் என முதல்வர் மு..ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதல்வர் மு..ஸ்டாலின், அண்மையில் துபாய்க்கு சென்ற நேரத்தில் ஏதோ பல கோடி ரூபாயை எடுத்துச்சென்றதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதை பார்த்தேன்.

அதற்கு நான் பதிலளிக்க தேவையில்லை. நமது கூட்டணி கட்சித் தலைவர்கள் பதிலளித்துவிட்டனர் என்றார். அதற்கு அடுத்ததாக அண்மையில் மூன்று நாட்களாக டெல்லி பயணம் மேற்கொண்டேன். அங்கு நம் மாநிலத்தின் தேவை அனைத்தையும் பிரதமரிடமும், அதற்குரிய அமைச்சர்களிடமும் கோரிக்கைகளை எடுத்துவைத்து, உரிமைக்கு குரல் கொடுத்து வந்துள்ளேன்.

stalin

இதையல்லாம் தாங்கிக்கொள்ள முடியாத சிலர், ஏதோ அச்சத்தின் காரணமாக, பயத்தின் காரணமாக சிக்கலில் இருந்து என்னை காப்பாற்றிக்கொள்வதற்காக நான் சென்றதாக கூறுகின்றனர். ஒன்றை மட்டும் உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

STalin

அங்குசென்று யாருடைய காலிலும் விழுந்து, இதை செய்து தாருங்கள் என்று கேட்கவில்லை. தமிழகத்தின் உரிமைக்காகத்தான நான் சென்றேன், வேறு எதற்காகவும் அல்ல. ஏனென்றால், நான் சாதாரண ஸ்டாலின் அல்ல, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இந்த கலைஞரின் மகன் என்றைக்கும் தமிழகத்திற்காக உழைப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it