Theme Check

அசைவ உணவு பிரியர்கள் அதிர்ச்சி..!! சிக்கன் தந்தூரி சாப்பிட 12-ம் வகுப்பு மாணவன் பலி

அசைவ உணவு பிரியர்கள் அதிர்ச்சி..!! சிக்கன் தந்தூரி சாப்பிட 12-ம் வகுப்பு மாணவன் பலி

அசைவ உணவு பிரியர்கள் அதிர்ச்சி..!! சிக்கன் தந்தூரி சாப்பிட 12-ம் வகுப்பு மாணவன் பலி
X

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட மாணவி தேவானந்தா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து காசர்கோட்டில் உள்ள அனைத்து ஷவர்மா கடைகளையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

Tandoori

இந்நிலையில், ஆரணியில் தந்தூரி சிக்கன் சாப்பிட்டு பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். இவரது மகன் திருமுருகன், 12-ம் வகுப்புத் தேர்வு எழுதி உள்ளார். இந்நிலையில் கடந்த 24-ம் தேதி நண்பர்களுடன் சேர்ந்த ஆரணி காந்தி நகர் சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் தந்தூரி சிக்கன் மற்றும் பிரைட் ரைஸ் சாப்பிட்டுள்ளார்.

பின்னர் வீட்டிற்கு சென்ற திருமுருகன் இரவு வயிற்று வலியால் துடித்துள்ளார். இதையடுத்து அவரை பெற்றோர்கள் அருகே இருந்த மருத்துவமனைக்குக் அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சாப்பிட்ட உணவு விஷமாக மாறியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

dead-body

இதனையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவர் திருமுருகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஏற்கனவே ஆரணியில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் பள்ளி மாணவர் ஒருவர் இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it