வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை.. அச்சத்தில் தென்கொரியா !!

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை.. அச்சத்தில் தென்கொரியா !!

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை.. அச்சத்தில் தென்கொரியா !!
X

உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் வடகொரிய மீண்டும் புதிய ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் தென்கொரியா பதற்றத்தில் உள்ளது. இந்த நிலையில், மீண்டும் வடகொரிய ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து தென்கொரியா அரசு தரப்பில் கூறுகையில், வடகொரியா சனிக்கிழமை கடலுக்கு அடியில் ஏவுகணை சோதனை நடத்தியது. தலைநகரிலிருந்து 270 கிலோ மீட்டர் தொலைவில் இந்த சோதனையை வடகொரியா நடத்தி இருக்கிறது. எதற்காக இந்த சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது என்பது பற்றிய விவரம் இதுவரை தெரியவில்லை, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

north koria weapen

முன்னதாக, வானில் இருக்கும்போதே இலக்குகளை தேர்ந்தெடுத்து அழிக்கும் வகையிலான டேக்டிகள் கைடட் ( tactical guided) என்ற ஏவுகணையை வடகொரியா ஜனவரி மாதம் பரிசோதித்தது. 2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து வடகொரியா இதுவரை 9 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கொரோனா காரணமாக மோசமான நிலையை அடைந்துள்ள பொருளாதாரத்தைக் கவனிக்காமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேம்படுத்துவதிலேயே கவனம் செலுத்துகிறது என்று ஐ.நா. கடந்த ஆண்டு கண்டித்திருந்தது. இந்த நிலையில், வடகொரியா இந்தச் சோதனையை நடத்தியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it