இனி 4 நாள் அல்ல, 6 நாள்.. அரசாணை வெளியிட்டது அரசு..!
இனி 4 நாள் அல்ல, 6 நாள்.. அரசாணை வெளியிட்டது அரசு..!

தமிழகத்தில் இனி ஜனவரி 26, மார்ச் 22, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2, நவம்பர் 1 என, ஆண்டுக்கு 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் விதி எண் 110-ன் கீழ் பேசியபோது, “தமிழகத்தில் இனி ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2, மார்ச் 22, நவம்பர் 1 என, ஆண்டுக்கு 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும்.
அத்துடன், 600 ஊராட்சிகளில் கிராம செயலகங்கள் கட்டப்படும். சிறப்பாக செயல்படக் கூடிய கிராமங்களை கண்டறிந்து, மாவட்டத்திற்கு ஒன்று என மொத்தம் 37 கிராம ஊராட்சிகளுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் ஆண்டுதோறும் ‘உத்தமர் காந்தி’ விருது வழங்கப்படும்.
அனைத்து ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கும் வாகனம், ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வு படித்தொகை 5 மடங்கு உயர்த்தி வழங்கப்படும்” என்று அறிவித்தார்.
இந்நிலையில், 2022-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டுக்கும் 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்த உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இதுவரை ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 என ஆண்டுக்கு 4 முறை நடைபெற்ற கிராம சபைக் கூட்டம், இனி குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினம் , உலக தண்ணீர் தினம், உள்ளாட்சி தினம் என, ஆண்டுக்கு 6 முறை நடைபெறும்.

