போதிய வருமானம் இல்லை.. 450 பேரை வீட்டுக்கு அனுப்பியது பிரபல நிறுவனம்..!
போதிய வருமானம் இல்லை.. 450 பேரை வீட்டுக்கு அனுப்பியது பிரபல நிறுவனம்..!

உலகின் முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ், பல பிரபலமான திரைப்படங்கள், தொடர்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது.
நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாக அமேசான், வால்ட்டிஸ்னி போன்ற பல நிறுவனங்களும் இருந்து வருவதால், சந்தையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள நெட்ஃப்ளிக்ஸ் தடுமாறுகிறது.
இதனால், சமீபகாலமாக சந்தாதாரர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் வருமானமும் குறைந்து வந்தது. இதனால் என்ன செய்வது என்று யோசித்தது.

இதன் காரணமாக, கடந்த மே மாதம் 150 பேரை பணியில் இருந்து நீக்கிய நெட்ஃப்ளிக்ஸ், இப்போது மேலும் 300 பேரை நீக்கியுள்ளது. இது, நெட்ஃப்ளிக்ஸ் பணியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ‛எங்கள் வருமானம் குறைந்து வருகிறது. அதேநேரம், முதலீட்டிலும் கவனம் செலுத்தும் போது இதுபோன்ற சில செலவு குறைப்பு நடவடிக்கைகளை செய்ய வேண்டும்.
நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துக்காக இதுவரை உழைத்தமைக்காக தொழிலாளர்களுக்கு நன்றி. கடினமான கொரோனா காலத்தில், மாற்றத்தை நோக்கி நகர்வதற்கு கடினமாக அவர்கள் உழைத்தார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

