Theme Check

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ராணுவ வீரர்கள் உடனடி பணி நீக்கம்- அதிரடி அறிவிப்பு !!

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ராணுவ வீரர்கள் உடனடி பணி நீக்கம்- அதிரடி அறிவிப்பு !!

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ராணுவ வீரர்கள் உடனடி பணி நீக்கம்- அதிரடி அறிவிப்பு !!
X

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் அமெரிக்க ராணுவத்தில் இருந்து உடனடியாக நீக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் மிக அதிகமான கொரோனா நோயாளிகளையும், கொரோனாவால் அதிக உயிரிழப்புகளையும் சந்தித்துள்ளது நாடாக அமெரிக்கா உள்ளது. ஒவ்வொரு அலையின் போதும் கொத்து கொத்தாக மக்கள் பாதித்தும், உயிரிழந்தும் வருகின்றனர். ஆனால், அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் எதிர்ப்பாளர்கள் கலகம் செய்து கொண்டிருக்கின்றனர். ராணுவத்திலும் ஒரு குறிப்பிட்ட சாரார் தடுப்பூசி போடாமல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

usa army

இந்த நிலையில், தடுப்பூசி செலுத்தாவிட்டால் பணியிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள் என அமெரிக்க ராணுவம் தனது வீரர்களுக்கு எச்சரித்துள்ளது. ராணுவச் செயலர் கிறிஸ்டின் வார்முத் கூறுகையில், ராணுவத்தில் தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் இருக்கின்றனர். இவர்களால் படைகளின் மற்ற வீரர்களுக்கு அச்சுறுத்தல். படைகளை எப்போதும் தயார்நிலையில் வைத்திருப்பதில் இவர்களால் ஆபத்து ஏற்படக் கூடும். ஆகையால், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 3000-க்கும் மேற்பட்ட வீரர்கள் படிப்படியாக விடுவிக்கப்படுவார்கள்.

2021 கணக்கெடுப்பின்படி அமெரிக்க ராணுவத்தில் மொத்தமாக 4 லட்சத்துக்கு 82,000 வீரர்கள் உள்ளனர். கடந்த ஜனவரி 26ஆம் தேதியன்று ராணுவத்தைச் சேர்ந்த 2 பட்டாலியன் கமாண்டர்கள் உட்பட 6 உயரதிகாரிகள் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். தடுப்பூசி செலுத்த மறுத்ததால் அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதவிர 3,073 வீரர்களுக்கு ராணுவம் கண்டனக் கடிதம் அனுப்பியுள்ளது.

usa army

இதனிடையே, நேற்றிரவு அமெரிக்க கடற்படை வெளியிட்ட ஊடக அறிக்கையில், இப்போது வரை 8000 வீரர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருக்கின்றனர். 118 பேரை பணிநீக்கம் செய்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க முப்படை வீரர்களில் 97% சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

ஏற்கெனவே கடற்படை, விமானப்படையை சேர்ந்த சுமார் 650 வீரர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவை பொறுத்தவரை, மதம் மற்றும் மருத்துவ காரணங்களை கூறி அமெரிக்காவில் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in


Next Story
Share it